Monday, October 18, 2010

டிவிட்டருக்கு குட்பை!


டிவிட்டரிலிருந்து விலகிவிடுவது என்பது நீண்ட நாள் திட்டம். ஒரு முறை அதில் எதுவுமே எழுதாமலிருக்க திட்டமிட்டு பல்லைக் கடித்துக் கொண்டு வெற்றிகரமாக இருபத்திரண்டு நிமிடங்களை கழித்து விட்டு கைநடுங்க மீண்டும் போய் சங்கமத்தில் கலந்தேன்.

140 எழுத்துக்களுக்குள் விளையாடுவது என்பது சுவாரசியமான சவால்தான். ஆனால் வலைப்பதிவில்  இததனை நீளமாய் எழுதியுமே சொல்ல வந்ததின் போதாமையை உணரும் போது 140 என்கிற இடஒதுக்கீடு 'மணிரத்னம்' போன்ற பேருந்துச் சீட்டின் பின்புறத்தில் வசனமெழுதும் ஆளுமைகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாய் இருக்கலாம்.

மேலும் டிவிட்டர் என்கிற, அப்போதைய மனநிலையில் உடனடியாக எதிர்வினையாற்றும் ஊடகம், தமிழர்களின் அத்தியாவசிய குணாதிசயங்களுள் ஒன்றான வம்பு பேசும் நோய்க்கூறு மனநிலையை பெட்ரோல் ஊற்றி வளர்க்கிறதோ என்கிற ஐயம் எனக்குண்டு. அந்த ஜனத்திரளில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்துதான் இதைச் சொல்கிறேன். திண்ணையில் எதிரெதிரே அமர்ந்து பேசும், சீட்டுக்கட்டு விளையாடும் மனநிலையை டிவிட்டர் ஏற்படுத்துகிறது. சிரிப்பும் கும்மாளமுமான உரையாடல் எப்போது வேண்டுமானாலும் சிலரிடம் கைகலப்பை ஏற்படுத்தலாம் என்கிற பதட்டத்தையும் அது தருவதாக இருக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புதான் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுதவிர டிவிட்டர் அதிக நேரததைத் தின்கிறது என்பது இன்னொரு பிரதான காரணம். 140-க்குள் எதையாவது எழுத வேண்டும் என்கிற உந்துதலும், எதைவேண்டுமானாலும் எழுதிவ விடலாம் என்கிற உழைப்பைக் கோராத அலட்சியமும், அதற்கு எதிர்வினையாற்றுபவருக்கு பதில், மீண்டும் கேள்வி, பதில், அதற்கான காத்திருப்பு என்கிற மாயச்சுழலில் நம்மையும் அறியாமலே ஆழத்தில் இறங்கிக் கொண்டிருக்கிற நிலையை டிவிட்டர் உருவாக்குகிறது.

இந்தக் காட்டுக்குதிரையை அதற்கேயுரிய லாவகத்துடன் கையாண்டு பயணம் செய்கிற சாமர்த்தியசாலிகளையும் அதே சமயத்தில் காண்கிறேன்.ஒருபுறம் பார்த்தால், தொழில்நுட்பங்களின் மீது எவ்வித குற்றமுமில்லை. அதைக் கையாளும் மனித மனங்களின் மீதுதான்.

என்றாலும் முக்கியமான செய்திகளை உடனுக்குடன் பகிர்வது, முக்கியமான இணையத்தளங்களை கொண்டு தருவது,  என்பது முதல் மைலாப்பூரில் பொடிதோசை எங்கு கிடைக்கும் என்பது வரையான செய்திகளை, தகவல்களை நண்பர்கள் உடனுக்குடன் கொட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆக்கப்பூர்வமாகவும் இது பயன்படும் என்பதை சுனாமி, பூகம்பம், --- குரூப் ரத்தம் உடனடியாக தேவை.. போன்ற எதிர்பாரா சமயங்களில் உணர வைக்கிறது. ரைட்டர் பேயோன் போன்றவர்கள் இந்த ஆடுகளத்தின் சூட்சுமத்தை கச்சிதமாக உணர்ந்து வெற்றிகரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்.. என்னைப் பொருத்தவரை ஏதோ இது எனக்கு சரிப்பட்டுவரவில்லை. ஆகவே இன்று முதல் என்னுடைய டிவிட்டர் கணக்கை நீக்கி விட்டேன். இதுநாள் வரை அந்த ஊடகத்தில் என்னுடன் தோழமையாக உரையாடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி. இந்தத் தகவலை டிவிட்டர் ஜனங்களுக்கும் பகிரவே இந்தப் பதிவு.

டிவிட்டரை தற்காலிமாக பூட்டி வைத்திருந்த சமயத்தில் பல நண்பர்கள் அதற்கான வேண்டுகோளை அனுப்பியிருந்தனர். இந்த முடிவினால்தான் அவர்களுக்கு அதற்கான இணைப்பை செயல்படுத்த முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவும்.

டிவிட்டரின் சமீபத்திய தம்பியான  GOOGLE BUZZ-ஐயும் இதே போல் கைவிட தி்ட்டம். இனி ஒன்லி BLOG தான்.

எந்தவொரு புதிய பதிவையும் டிவிட்டரில் தெரிவிப்பது வழக்கம். இந்தப் பதிவை அவ்வாறு தெரிவிக்க முடியாது என்பதுதான் இதிலுள்ள CATCH 22 சோகம். 

suresh kannan

23 comments:

  1. அரங்கசாமிOctober 18, 2010

    புத்திசாலித்தனம் .

    ReplyDelete
  2. பிரபுOctober 18, 2010

    மிக்க நன்றி...

    ReplyDelete
  3. பப்பரப்பாOctober 18, 2010

    மிக நல்ல முடிவு.மிக்க நன்றி

    பப்பரப்பா

    ReplyDelete
  4. பப்பரப்பாOctober 18, 2010

    சுனாகனா அண்ணா,

    உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னா. இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வளவு மாற்றம். I love u சுனாகனா அண்ணா. நல்லா இருங்கோ!

    ReplyDelete
  5. ஆடத்தெரியாதவன் மேடை கோணல்னு சொன்னானாம். மன்னிக்கனும், மனசுல பட்டதை அப்படியே தட்டிட்டேன். மத்தபடி, பதிவுகள்ல சந்திப்போம்

    ReplyDelete
  6. இப்படி உள்ளதை(twitter weakness/sickness) உள்ளபடி சொல்ல ஒரு guts வேண்டும்

    ReplyDelete
  7. //ரைட்டர் பேயோன் போன்றவர்கள் //

    என் பெயரை வேண்டுமென்றே கூறாமல் விட்டுவிட்ட உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

    :-)

    ReplyDelete
  8. பரிசல் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

    ஆனால் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டீர்களோ? இன்றைக்கு உங்களுக்கு சரி வராத ட்விட்டர் நாளை சரி வரலாம். வராமலும் போகலாம். திரும்பி நீங்கள் ட்வீட் பண்ண ஒரு வேளை வந்தால் 'அன்னைக்கு அப்படி சொன்னியே, இன்னைக்கி ஏன் வந்தாய்' என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் !

    த்விட்டரும் பஸ்சும் பெரிய time stealers. அதை லாவகாமாகக் கையாள்வது ஒரு சிலருக்கே முடியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. //ஆனால்.. என்னைப் பொருத்தவரை ஏதோ இது எனக்கு சரிப்பட்டுவரவில்லை. // எனக்கும் இதே நிலைதான். ஆனால் கடையை மூட இன்னும் மனம் வரவில்லை. )) ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க்கில் தொடர்ந்து இயங்க அதிக நேரமும் நிறைய எனர்ஜியும் தேவைப்படுகிறது...வலைத்தளம் மட்டுமே மனதிற்கு சற்று நெருக்கமாக இருக்கிறது சுரேஷ் ;)) உங்கள் முடிவை கூடிய சீக்கிரம் நானும் எடுக்க விழைகிறேன்.

    ReplyDelete
  10. http://dineshkarthi.blogspot.com/

    see above blog of me. its just a demo blog. see its first post title. i have a blinking word new at its end(the red colored word 'New' doesnt blink in chrome. It blinks only in mozilla)

    if u too want a blinking word at end of post title just type this HTML code at the end of post title.

    [blink style="color: red; font-size: 78%;"]NEW[/blink]

    Note:

    Replace [ and ] by < and >

    ReplyDelete
  11. போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

    ReplyDelete
  12. சந்தோசம். எப்பதான் இந்த ப்ளாக் படிக்கிறவனுக்கு இந்த இன்பம் கிடைக்குமோ தெரியலையே. எதுக்கும் வேண்டிக்குவோம்.

    ReplyDelete
  13. நேரத்தை சாப்பிடுகிற எந்த விஷயத்தையும் ஒதுக்குவது நல்லதே

    ReplyDelete
  14. நீங்க சொல்லுறது ரொம்ப நல்லாயிருக்கு... நன்றிகள்
    mathisutha.blogspot.com

    ReplyDelete
  15. It is a good decision to avoid unnecessary wastage of time. Though you might have shared your views instantaneously, after sometime they remain as nothing but an avoidable expenditure of time. A helpful decision for you.

    ReplyDelete
  16. Hi Suresh,

    I understand your point. Twitter may be the best site in the web - but if YOU feel that it sucks YOUR time and does not provide enough value - just walk out. No explanation is required to anyone.

    Later when you feel that it may provide better value - hop on to it.

    தன்னிலை விளக்கங்கள் தேவை இல்லை...

    It is your time and you are one to decide on what is correct and what works for you.

    Thanks

    Venkat R

    ReplyDelete
  17. பல விதக் காரணங்களையும் அலசித்தான் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். பொதுவாக என் மகன்கள் உள்பட யாருக்கும் கேட்காமல் ஆலோசனைகள் சொல்வதில்லை. எனினும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. Thomas Hardy யின் புகழ் பெற்ற படைப்பின் தலைப்பு Far from the mading crowd. விலகி நின்று ஒரு ஞானச் செறுக்குடன் ட்விட்டரை அணுகுங்கள். அதனுள் மூழ்காமல் அதனில் நீந்துங்கள். அதற்கு அடிமை ஆகாமல் அதனை உங்களுக்கு அடிமையாக்குங்கள். அந்த ஊரில் அதிகம் ஆலைகள் இல்லை. எனவே இலுப்பைப் பூக்கள் கவனிக்கப்படுகின்றன. உங்களிடம் stuff உள்ளது. ஜமாயுங்கள். நாளொன்றுக்கு மேக்ஸிமம் 10 ட்விட்டுகள். சரியா?

    ReplyDelete
  18. (மீண்டும் கைக்கோ உட்பட) பலர் டிவிட்டரில் உங்களைப் பற்றி புறம்பேசிக் கொண்டே இருக்கிறார்களே? பார்த்தீர்களா?

    ReplyDelete
  19. //டிவிட்டரில் புறம்பேசிக் கொண்டே இருக்கிறார்களே? பார்த்தீர்களா?//

    அதான் எழுதியிருந்தேனே, நோய்க்கூறு மனநிலை என்று. மனஆரோக்கியம் உள்ளவர்களால்தான் இதை உணர்ந்து சட்டென்று வெளியே வர முடியும்.

    நாமே கழியும் அல்லது சாலையில் கிடைக்கும் மலத்தை குறுகுறுப்புடன் ஒரு கணமாவது பார்த்து சட்டென்று விலகுவோம் அல்லவா? அவ்வாறுதான் இதையும் பார்ப்பது.

    ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை முன்வைத்தேன். தான் ஜென்டில்மேன் மாத்திரமல்ல, மேனே இல்லையென்று சிலர் நிரு'பீ'த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    'உன்னை சிலர் வெறுக்கவும் புறம்பேசவும் ஆரம்பித்து விட்டால் நீ புகழடைந்து கொண்டிருக்கிறாய்'என்பது ஒரு சொலவடை. இதை எனக்கு உணர்த்திக் கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. :(

    //போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் //


    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :) அண்ணாச்சி கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் டிவிட்டர் பக்கம் வருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் !

    ReplyDelete
  21. நண்பர்களுக்கு நன்றி.

    டிவிட்டர் எனும் இந்த சமூக வலைப்பின்னல் சாதனத்தை என்னால் திறம்பட கையாள முடியவில்லை என்பதுதான் உண்மை. கையாள்கிறவர்களுக்கு என் வணக்கங்கள். :)

    டிவிட்டரின் கணக்கை மூடாமலேயோ அல்லது அவ்வாறு மூடியதை இவ்வாறு வெளிப்படையாக அறிவிக்காமலேயோ கூட இதை அமைதியாக செய்திருக்கலாம். ஆனால் இப்படி உரக்கக்கூறி தெரிவித்து விட்டால் 'மீண்டும்' என்கிற சபலம் என்னிடம் ஏற்படவே படாது என்பதற்காகத்தான் இது. :)

    ReplyDelete
  22. பொதுவாகவே நாம் இலவச விரும்பிகள்,நேரகொல்லிகள்,வம்பு பிரியர்கள் ..இம்மூன்றுக்கும் தீனி போடுவதுதான் ப்ளாக்,ட்விட்டர் போன்றவை.ஒரு பின்னூட்டத்திற்கு ஒரு ரூபா கட்டணம் என்றால் ஒருவர் கூட இந்தப்பக்கம் வரமாட்டார்கள்.
    அதைபோன்றதுதான் ட்விட்டரும்.
    so vittathu புத்திசாலித்தனம்!

    ReplyDelete