Wednesday, June 02, 2010

சாரு என்கிற சமூக வியாதி (1)


 கருத்து ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட வகையிலோ ஒருவரிடம் என்னதான் பகைமை இருந்தாலும் இப்படியா ஒருவர் தன்னுடைய வன்மத்தை நீர்த்துப் போகாமல் தொடர்ச்சியாக பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்று திகைப்பாக இருக்கிறது.

சாரு தன்னுடைய இணையப்பக்கத்தில் ஜெயமோகன் குறித்து மிகக் குரோதமாக எழுதப்பட்ட ஒரு வலைப்பதிவை தன்னுடைய வாசகர்களுக்கு பரிந்துரை செய்து அகமகிழ்ந்திருக்கிறார். (அந்த வலைப்பக்கத்தில் உள்ள நபரின் புகைப்படமும் சுயக்குறிப்பும் வாசிப்பவரை மிரட்டுவது போலவே அமைந்திருப்பது திட்டமிட்ட ஏற்பாடா என தெரியவில்லை). சாருவிற்கும் ஜெயமோகனிற்கும் இதுவரை நிகழ்ந்திருக்கும் தனிமனித குரோத விளையாட்டுக்கள் நாம் அறிந்ததே. ஒரளவிற்கான நாகரிக எல்லைக்குள் எழுதும் வாழைப்பழ ஊசி நடையில் ஜெமோ விற்பன்னர் என்றால் தன்னை வெள்ளந்தி, அப்பாவி என சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் சொல்லிக் கொள்ளும் சாருவின் மொழியோ ஜெமோ என்று வந்துவிட்டால் தனிமனித காழ்ப்புணர்ச்சியும் வன்மமும் நிறைந்ததாக மாறுகிறது. இந்தச் சகதியிலிருந்து தற்சமயம் ஜெமோ ஒதுங்கி நின்றாலும் சாருவின் வன்மம் அடங்குவதாயில்லை.

அவர் தனது வாசகர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் இடுகை, ஜெயமோகனை மாத்திரமல்லாது அவரது குடும்ப உறுப்பினர்களையும் தனிப்பட்ட விஷயங்களையும் கூட குரோதமான மொழியில் தொட்டுச் செல்கிறது. இதைப் பரிந்துரைத்திருப்பவர், தன்னை தமிழில் எழுதும் உலக எழுத்தாளர் எனவும் அதற்கான சர்வதேச அங்கீகாரம் இல்லையே என்று தொடர்ந்து புலம்புபவர். அடக் கஷ்டகாலமே! எழுத்தாளனாகக் கூட வேண்டாம், ஒர் அடிப்படை மனிதனாகக் கூட இல்லாதவரா தமிழ் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிநிதி?

இரண்டு தனிநபர்களுக்குள் (எழுத்தாளர்களுக்குள்) நிகழும் குரோத விளையாட்டில் சம்பந்தமேயில்லாத ஒருபாவமும் அறியாத அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் (குழந்தைகளையும் விட்டு வைக்கில்லை) இழுப்பது எந்தவகையான அறம் என தெரியவில்லை. கருத்து ரீதியாக மோதியும் ஈகோக்களால் சண்டையிட்டும் அரிப்பு தீரவில்லையென்றால் இரண்டு நபர்களும் (எழுத்தாளர்களும்) குத்துச் சண்டையிட்டாவது தங்களின் வெற்றியை நிர்ணியித்துக் கொண்டு தொலையலாம். அதை விட்டு எங்கு அடித்தால் நன்கு வலிக்கும் என்று தெரிந்து கொண்டு  சக எழுத்தாளனின் குழந்தையைக் கூட இடுப்பின் கீழ் தாக்குவது எந்தவகையான போர் நியாயம் என்றும் தெரியவில்லை.

‘ஜெயமோகனின் தனிப்பட்ட விஷயத்தை எழுதிவிட்டீர்கள் என்று சில அசடுகள் கத்தும்’ பொருட்படுத்தாதீர்கள் என்று ‘பெரியாரியவாதியான’ தன்னுடைய வாசகரை முன்யூகமாக ஊக்கப்படுத்துகிறார் சாரு. இதுவல்லவா ஒர் எழுத்தாளனின் தார்மீக கடமை. முன்பொரு முறை பதிவர் சிவராமன் தன்னுடைய பதிவொன்றில் ‘சாரு தன்னுடைய மகளை வன்புணர்ச்சி செய்துவிட்டார்’ என்கிற பாவனையுடன் எழுதிய வாக்கியங்களுக்கே ‘நாசமாப் போயிடுவே’ என்று மண்ணைத் தூற்றி சாபம் விட்டவரும் வழக்கு போடுவேன் என்று மிரட்டியவருமான சாருவும் இந்த வகையில் அசடா அல்லது காரியக்கார அசடா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

()


என்னுடைய கடந்த பதிவொன்றில்,  ‘சாரு’வை சர்வதேச விருதுடன் சம்பந்தப்படுத்தி எழுதியிருந்த போது 'ஏன் அவ்வாறு செய்தீர்கள்" என சில நண்பர்கள் ஆதங்கப்பட்டிருந்தார்கள். அது ஒருவகையான பகடி என்பதை சில பேர்களாலேயே உணர முடிந்தது. “கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்துக்கு போறேன்னானாம்’ என்பது ஒரு சொலவடை. அதுபோல் உள்ளூரிலேயே எந்த விருதும் வாங்கத் தகுதியில்லாதவர், வாங்கினால் சர்வதேச விருதைத்தான் வாங்குவேன் என்று சவடால் அடிப்பது அபத்தமான நகைச்சுவை. மேலும் ஒரு காலத்தில் ஏதோ எழுதி இன்று காலி பெருங்காய டப்பாவாக இருக்கும் சாரு, வெளியே மழை பெய்வது தெரியாமலும் மூத்திரத்தை அடக்கிக் கொண்டும்.. அப்படி என்னதான் எழுதி வருகிறார் என்று பார்த்தால் முக்கி முக்கி உயிர்மைக்கு மாதத்திற்கு ஒரு சினிமா கட்டுரையை கடைசி நேரத்தில் எழுதி கொடுக்கிறாராம். இதை விட ஆழமான சினிமா கட்டுரைகளை இன்று வலைப்பதிவர்களே எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றபடி மெரினாவிற்கு வாக்கிங் சென்றதையும்.. வஞ்சிரமீன் வாங்கின மொக்கைகளையும் எழுதுவதற்கே இத்தனை பில்டப் கொடுப்பது ஒருபுறமிருக்கட்டும். (இந்த அழகில் ஒரு காவல் அதிகாரி ‘தினமும் எழுதிவில்லையென்றால் முட்டிக்கு முட்டி தட்டுவேன்’ என்றாராம். இதுவும் வழக்கமான கற்பனைக் கடிதங்களில் ஒன்று என்று யூகிக்க முடிந்தாலும் அது நிஜமாகவே இருக்கும் பட்சத்தில் அந்த காவல் அதிகாரி 'இனிமே ஏதாவது எழுதினே, முட்டிக்கு முட்டி தட்டுவேன்' என்றுதான்  சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது).

இப்போது திடீர் பரவசத்தில் கவிதை வேறு எழுதுகிறாராம். என்னடா இது தமிழிற்கு வந்த சோதனை? இப்படியே போய்க் கொண்டிருந்தால் சாகித்ய அகாதமி அல்ல,  கண்ணம்மா பேட்டை குடியிருப்போர் (?) நலசங்க விருது கூடக் கிடைக்காது.

சக எழுத்தாளர்களை எப்படி திட்டலாம் என்பதை யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு தன்னுடைய பலமான புனைவிலும் பத்தி கட்டுரைகளிலும் இன்னும் நிறைய புதிய விஷயங்களை சாரு தந்தால் அல்லக்கைகள் அல்லாத உருப்படியான வாசகர்களைப் பெறலாம்.

(தொடரும்)

பிற்சேர்க்கை 1: இந்த இடுகை எழுதப்படும் முன்பு வரை சாருவின் தளத்தில் இருந்த அந்த பரிந்துரைப் பதிவு தற்போது எதனாலோ நீக்கப்பட்டிருக்கிறது. சாரு திருந்தியிருக்கிறாரா அல்லது பதுங்கியிருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

பிற்சேர்க்கை 2: சாரு பரிந்துரைத்த வலைப்பக்கத்தின் புரொபைலில் இருந்த புகைப்படமும் மாற்றப்பட்டுள்ளது. (முன்பிருந்த , உடற்பயிற்சி செய்யும் ஒரு திடகாத்திரரின் புகைப்படத்திற்கு பதிலாக (இது சாருவின் பதிவிலும் இருந்தது) சிங்கத்தின் புகைப்படம் தற்சமயம் உள்ளது).

 suresh kannan

35 comments:

  1. உங்களின் வருத்தம் அக்கறை புரிகிறது.

    ஆனால் இந்த விமர்சனத்தை சாரு ஏற்று கொள்வாரா

    சாருவையும் குறை சொல்ல முடியாது. அவர் என்னதான் குரோதமாகவும், அனாகாரிகமாக எழுதினாலும் படிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமே. (same with Jemo too)

    ReplyDelete
  2. ஈஸ்வரன்June 02, 2010

    அந்த பதிவை எழுதினவர் ஒரு எழுத்தாளரா? சாருவின் கூளிபடைத்தலைவர் என்று நினைத்தேன். சாருவே எழுதிவிட்டு அவர் பெயரில் வெளியிட்டிருக்கிரரோ என்னவோ.இதை விட தரம் தாழ சாருவினால்கூட முடியாது.

    ஈஸ்வரன்

    ReplyDelete
  3. ஈஸ்வரன்June 02, 2010

    ராம்ஜி
    நடுவு நிலைமை என்ற பெயரில் குழப்பதிர்கள். குரோதமாகவும், அனாகாரிகமாகவும் ஜெமோ என்ன எழுதினர் என்று சுட்ட முடியுமா?

    ஈஸ்வரன்

    ReplyDelete
  4. இந்த மனிதருக்கு அடிப்படை நாகரிகம் ,அறிவே குறைவா இருகறப்ப ...எனத்த எழுதி எனத்த கிழிக்க போறாரோ?

    //கருத்து ரீதியாக மோதியும் ஈகோக்களால் சண்டையிட்டும் அரிப்பு தீரவில்லையென்றால் இரண்டு நபர்களும் (எழுத்தாளர்களும்) //

    இந்த இரண்டு நபர்களுக்கு அரிப்பு தீரவில்லையென்றால் இவர்களுக்கு சொறிந்து விட நெறைய அடி வருடிகள் இருக்கறாங்களே...அவர்களின் உதவியை கேட்டு பெற வேண்டியது தானே ?


    இந்த எழுத்து வியாதிகள் பற்றி என் சிந்தனை ...
    http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_14.html

    ReplyDelete
  5. AnonymousJune 02, 2010

    "இந்த இடுகை எழுதப்படும் முன்பு வரை சாருவின் தளத்தில் இருந்த அந்த பரிந்துரைப் பதிவு தற்போது எதனாலோ நீக்கப்பட்டிருக்கிறது. சாரு திருந்தியிருக்கிறாரா அல்லது பதுங்கியிருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.""

    இதுவேறயா.....எத்தத் தின்றால் பித்தம் தெளியும்ன்னு ஒரே குழப்பமா இருக்காரு போல. லெதர் பாருக்கு போயி சரக்கடிச்சா சரியாயிடும். காசு.....

    ReplyDelete
  6. பின்னூட்ட விவாதங்கள் அறியும் பொருட்டு!

    ReplyDelete
  7. சார்.. உங்க அட்ரஸ் குடுங்க... வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி வைக்கிறோம்... :))

    இப்படிக்கு
    சாருவை எப்படியோ பிடித்து தொலைக்கும் ஒரு அப்பாவி வாசகர்

    ReplyDelete
  8. 35 ஆண்டுகள் ஓயாமல் எழுதிக்கொண்டிருக்கும் மனுசன்.

    சாருவை அதிகமாக வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரை பிடித்து தொலைக்கிறது.

    என்ன செய்ய ?

    அவரை பார்த்தால் எனக்கு உண்மையில் பாவமாக இருக்கிறது..

    ReplyDelete
  9. AnonymousJune 02, 2010

    He has also commented about kamal unncessarily in his blog.
    Please see the link.
    http://charuonline.com/blog/?p=620
    Request fans to raise their objection.

    ReplyDelete
  10. உங்களின் வருத்தம் கோபம் புரிகிறது சார்.


    http://kuttytamilish.blogspot.com/2010/06/blog-post.html

    இதையும் படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் நன்றி.

    ReplyDelete
  11. ஒரே சவத்தை எதனை நாளைக்கு கட்டி மாரடிபீர்கள்?
    இப்படி கூட அந்த நபரை பற்றி எழுதியாக வேண்டும் என்று என்ன நிர்பந்தமோ ?
    பதிவர் உலகம் இப்படி நாறி போனதின் காரணம் புரிகிறது.
    பாதிபேர்கள் ஜெயமோகனுக்கும் மீதி பேர்கள் சாரு போன்ற வர்களுக்கும் பின்னால்
    சென்றதின் விளைவுதான் இப்படி சண்டையும் சச்சரவும் மாய் ஆகிப்போனது.
    மூத்த பதிவர்களை பார்த்து நேற்று வந்தா நானும் கூட நையாண்டி செய்யும் நிலை.
    Just ignore him! thats all !!
    பிறகு எல்லாம் சரியாக அதன் அதன் இடங்களில் இருக்கும் நண்பரே!

    ReplyDelete
  12. அடிக்கிற புயலில் மிக முக்கியமான பதிவு அமுங்கி போனதில் வருத்தம் :(((

    ReplyDelete
  13. நடுநிலையான ஒரு கருத்து பகிர்வு...

    எழுத்துகளை நேசிப்பதை விட்டு விட்டு, அதை எழுதுபவர்களை ரசிக்க ஆரம்பிக்கும் பழக்கதினால் வரும் மோசமான விளைவுகளில் தற்போது நடக்கும் மறைமுக போரும் ஒன்று தான்...

    சினிமா, அரசியல் என்று இருந்த இந்த வன்மம், இப்போது பதிவுலகத்திலும் தொடங்கி இருப்பது, ஒரு வருந்ததக்க செயல். ஆனால் காரியம் கைமிஞ்சி போய் விட்டது மட்டும் உண்மை.

    இவற்றை விட்டு ஒதுங்கி இருப்பதே இவர்களுக்கு தரபடும் சரியான தண்டனையாக இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
  14. அன்புள்ள சு.க ,

    அந்த அமர்நாத் கடிதத்திற்க்கப்புறம் வாசகர்களின் கண்டுப்பான வேண்டுகோளுக்கிணங்க நாய் குலைப்பதை ஜெ பொருட்படுத்துவதே இல்லை,

    இந்த ஆள் உயிர் வாழ்வதே ஜெ எதிர்ப்பரசியலில் தான் எனபதை ஜெ உணர்ந்தவுடன் இவரை கண்டுகொள்வதேயில்லை ,

    இந்த ஆளின் சகவாசத்தால்தான் மனுஷ்யபுத்திரன் அறிவுகெட்டு போனார் , (ஜெவின் 20 புத்தகங்கள் விற்பனையில்தான் சாருவின் விற்காத புத்தகங்களை வெளியிட காசு வருகிறது , இதை தமிழ்நாட்டின் எந்த இலக்கிய புத்தக கடையிலும் நீங்கள் விசாரிக்கலாம்)

    ஜெவின் வாசகனாக இந்த ஆளை இதே மொழியில் -அதிகமாக கூட- எழுத எவ்வளவு நேரமாகும் ?

    ஆனால் இந்த ஆள் நாலுபேர் தன்னை கவனிக்க வேண்டுமென்று தெருமுனையில் ஊரின் பெரிய மனிதரை திட்டும் தெருக்குடிகாரன் , இவரை பொருட்படுத்துவது பைத்தியக்காரத்தனம் என்று ஜெ வாசகர்கள் உணர்ந்ததுதான் எதிர்வினைகள் அதிகமாக இருக்காததன் காரணம் .

    இந்த பதிவு தேவையில்லாதது என்று சொல்ல நினைத்தாலும் ஜெ அளவுக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை ,

    (எங்காவது நேரில் கண்டால் காலில் இருப்பது நிச்சயம் கைக்கு வரும் என்று சொல்ல தோன்றினாலும் சொறி பிடித்த மிருகத்தை போய் அடிக்க வேண்டுமா என்று நீங்களே கேட்பீர்கள் என்பதால்...)

    ReplyDelete
  15. பதிவிலும் , பின்னூட்டங்களிலும் யோசிக்க வைத்த விசயம் .

    என்னதான் ஜெயமோகன் சும்மா போனாலும் “சண்டையிடும் எழுத்தாளர்கள்” ஜெயமோகன் சாணி சண்டை என்று என்னவோ ஜெவும் சாநி லெவலுக்கு எழுதுவதை போல எழுதுகிறார்கள் ,

    ஜெ என்னய்யா செய்தார் இதிலே ? நீண்ட நாட்களாக அவர் எதுவும் எதிர்வினை ஆற்றுவதில்லையே ?


    (”பூக்கடை” போல் இல்லாமல் ஏப்ரல் 1 அன்று அட்டகாசமாக எழுதிய “புனைவு” தவிர :)

    ReplyDelete
  16. AnonymousJune 03, 2010

    வேற வழியில்லை குசும்பன் ஒரு பிரச்சினையில இருந்து திசை திருப்ப இன்னொரு ஸ்ட்ராங்கான பிரச்சினை வேணும்ல

    சண்டைய வேடிக்கை பார்க்குற ஆளுங்க
    விடாத அடி! ம்ம்... அப்படித்தான் =கள் எல்லாம் கொஞ்சம் உசும்பி சாருவா ஜெமோவா அட நம்ம ஏரியா எறங்கி ஆடுவோம்ன்னு சிலித்துக்க வேணாமா

    நீங்களாச்சும் எல்லாம் மறந்துட்டு பதிவ போடுங்க சார்

    ஊதி ஊதி அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க போஸ்ட் மேன் மாதிரி வீட்டுக்கு வீடு லெட்டர் படிச்சு காட்டுறவிங்க

    சு.க சாரி ! மிஸ்யூஸ்பண்ணினதா நினைச்சா

    ReplyDelete
  17. AnonymousJune 03, 2010

    irandu nnai padathil mela ulla naai yaar

    ReplyDelete
  18. நான் எப்போதுமே சாருவை படிப்பதில்லை. சில கடைகளை பார்த்தாலே உள்ளே செல்ல மனம் வராது. அங்கு சாப்பிடவும் தோனது. கடைகளும் அப்படித்தான் சிலரின் எழுத்துகளும்
    அப்படித்தான்!

    'சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்....' வாரம் தோறும் 'நித்தியை' பற்றி இப்போது (?) ரிப்போர்டரில் எழுதுவதிலேயே தெரிகிறது, சாமியாரிடம் சாரு வைத்திருந்த தொடர்பு.... !

    -தோழன் மபா

    ReplyDelete
  19. AnonymousJune 04, 2010

    http://kuttytamilish.blogspot.com/2010/06/blog-post.html#comments

    edited for 'decency':)

    போலி டோண்டு என்று ஒருத்தர் இணையத்தில் உலவினார்..வெறும் எதிர் கருத்து இருந்தால் போதும்..மனைவி, மக்கள், அப்பா,ஆயா எல்லாரையும் இழுத்துவிட்டு நாறடித்து விடுவார்..அவரைக் கண்டு ஒரு காலத்தில் தமிழ் இணையமே தலைதெறிக்க ஓடியது.தினம் தினம் பரபரப்புதான்,அவர் பேச்சு தான்..அதனால் அவர் பெரிய ஆளா? இல்லை...அவருக்கெல்லாம் இன்று அட்ரஸ் கூட இல்லை..அப்படித்தான் இந்த சாரு..சோத்துக்கு,தண்ணிக்கு பஞ்சம் வராமல் பிழைக்க சில பேர் உதவுகிறார்கள்..அதனால் வக்கிரம் கொண்டு போலி போல தனக்கு பிடிக்காதவர்களை --- போல விமர்சிக்கிறார்..ஜெயமோகனைத் திட்டிப் பார்த்தார்..ஒரு --- சீந்தவில்லை..இப்போது போலி போல ஜெயமோகனைத் திட்டுவதற்கென்றே ஒரு போலி வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளார்..போலி போல அதையும் காப்பி தான் அடிக்கிறார்..ஜெ.மோ. எங்கே?இந்த -------- எங்கே? இணைய போலி போலவே செயல்பட்டு வரும் இந்த ------ போலி டோண்டு எப்படி பொறியில் மாட்டினாரோ அப்படியே வலைவிரித்து பிடிக்கப்படுவார்..வேலை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது..

    ReplyDelete
  20. ராம்ஜி_யாஹூ said...
    //same with Jemo too

    Can you point out something indecent written by JM?

    ReplyDelete
  21. AnonymousJune 04, 2010

    //சாருவை அதிகமாக வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரை பிடித்து தொலைக்கிறது.
    என்ன செய்ய ?

    ஏங்க ரவி,
    ஒங்க நண்பி பேர் போடாம ஒருத்தர் 'புனைவு'ங்கற பேர்ல எழுதின வக்கிரத்துக்கு எல்லாரும் பதறுறீங்க..ஆனா இந்த ஆளு சாரு பேரப் போட்டே அதுக்கு கொஞ்சமும் கொறைவில்லாத வக்கிரத்தோட எழுதி இருக்காரு (அல்லது எழுதினவர உற்சாகமா 'நல்லா எழுதுடா'ங்கறாரு..)பதற வேணாம்யா ..சும்மாவாவது வாய மூடிக்கிட்டு போலாம்ல..இங்க வந்து 'எழுத்து புடிக்கிது' ந்னு சொல்றீங்க..

    நீங்களும் ஒங்க நியாய,நேர்ம மசிருகளும்...

    JM Fan.

    ReplyDelete
  22. சுரேஷ்,
    யாரும் இங்கே(!!!!!!!!!!!) நேர்மையோடில்லை. சாரு, ஜெயமோகன் இருவரும் கட்டி அமைத்து வரும் தமிழ் இலக்கியக்கலோசியம் ஒரு பிணம் புதைக்கும் இடமாகத்தான் இருக்கப் போகிறது. இருவருமே தங்களின் முகமாகக்காட்டிக் கொள்வது போலித்தனம் நிரம்பிய பிம்பத்தை. அவரவருக்கு என்று ஒரு வழிபாட்டுக் கூட்டத்தை ஏற்படுத்தி தீணி போட்டு வளர்க்கிறார்கள்.

    கிளிஷே என்றாலும் இங்கே ஒன்றை சொல்லித்தான் தொலைய வேண்டி உள்ளது. "ஆசிரியன் இறந்துவிட்டான், பிரதி மட்டுமே வாழ்கிறது".
    வாசகனாக இந்த இரு எழுத்தாளர்களும் எழுதிய படைப்பும், அது முன் வைக்கும் அரசியல் மற்றும் அதன் மீதான விமர்சணமும் தான் முக்கியமே தவிர அவர்கள் அல்ல. ஜேயின் ஊமைச்செந்நாய் ஒரு உன்னதப்படைப்பு, ஆனால் அவர் பல படைப்புகளில் முன்வைக்கும் அரசியல் விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று. அதேபோல் சாரு செய்யும் நூல்/ இசை அறிமுகம் மிகச்சிறந்த முயற்சி. சுவாரசிய நடை மற்றும் அவரின் எக்ஸ்ஷிஸ்டென்சியலிசமும்
    பான்சி பனியனும் நாவல் ஆகியவை நான் ரசிப்பது. சாருவின் அரசியல் அல்லது அவரின் தனிநபர்கள் மீதான விமர்சனம் பற்றி நான் படிப்பதோ/யோசிப்பதோ இல்லை.
    ஆனால் இருவருமே பல அறிவுரைகளை உட்கார்ந்து யோசித்து எழுதுவார்கள். அது முழு காமெடி என்பதாவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உதா: ஈழம் தொடர்பான இருவரின் கருத்துக்குத்துக்கள்.

    நாம் படைப்பைவிட தனிநபர்களை விமர்சிப்பதையே விரும்புகிறோம். எனக்குத்தெரிந்து சாரு அல்லது ஜே அல்லது ஏதோ ஒரு எழுத்தாளனின் புத்தகங்கள் விமர்சிக்கப்படுவது அபூர்வம். ஆனால் இவ்விருவரைப் பற்றியும் தினம் ஒரு பதிவேனும் தனிநபர் தாக்குதலாகவோ / (சோம்பு) தூக்குதலாகவோ வருகிறது. வருத்தப்படவேண்டிய விஷயம். :(


    இங்கே வரும் பின்னூட்டங்களைப் பார்த்தால், பிம்ப வழிபாடு நம் ஜீனில் இருக்கிறதோ என்று எண்ணுவதை தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

    ReplyDelete
  23. திரு . ரவி ,

    உங்கள் கண்டனம் வெளிப்பட வேண்டுமென்றால் அவதூறு செய்யப்பட்ட பெண் அல்லது குழந்தை உங்கள் நண்பனுடையாதாக இருக்க வேண்டுமோ ?

    வாழ்க உங்கள் பெண்ணிய ஆதரவு .

    ReplyDelete
  24. நான் சொன்னது எழுத்தை தான் அய்யா. நான் வாசித்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு ஒன்றை சொன்னேன்.

    ஏன் அய்யா பெரிய இலக்கியவாதிகள் சண்டையில் எல்லாம் என்னை இழுக்கிறீர்கள் ?

    ReplyDelete
  25. //சாரு, ஜெயமோகன் இருவரும் கட்டி அமைத்து வரும் தமிழ் இலக்கியக்கலோசியம் ஒரு பிணம் புதைக்கும் இடமாகத்தான் இருக்கப் போகிறது.

    வந்துட்டாருப்பா..புலவரு..அது என்னங்க "இலக்கியக்கலோசியம்"????!!!

    // "ஆசிரியன் இறந்துவிட்டான், பிரதி மட்டுமே வாழ்கிறது".
    வாசகனாக இந்த இரு எழுத்தாளர்களும் எழுதிய படைப்பும், அது முன் வைக்கும் அரசியல் மற்றும் அதன் மீதான விமர்சணமும் தான் முக்கியமே தவிர அவர்கள் அல்ல.

    முடியல......ஆயுள் தண்டனைல உள்ள இருந்தீங்களா சாமி?

    //இருவருமே தங்களின் முகமாகக்காட்டிக் கொள்வது போலித்தனம் நிரம்பிய பிம்பத்தை.
    ஜேயின் ஊமைச்செந்நாய் ஒரு உன்னதப்படைப்பு, ஆனால் அவர் பல படைப்புகளில் முன்வைக்கும் அரசியல் விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று.

    இதுபோல வெத்து வேட்டுப் பேச்சுக்கள் ஓராயிரம் கேட்டாயிற்று...கூட்டத்தில் ஜெ.மோ-வின் எதாவது ஒரே ஒரு படைப்பை இலக்கிய ரீதியாக விமர்சனம்/திறனாய்வுசெய்தவன் மட்டும் கையைத் தூக்கவும்.

    ReplyDelete
  26. ஈஸ்வரன், சுனந்தா- நான் சாரு, ஜெமோ இருவரிடமும் உள்ள நல்ல எழுத்துக்களை நேசிப்பவன், தீய எண்ணத்தோடு எழுதும் எழுத்துக்களை நிராகரிப்பேன்.

    இன்னொரு பிரச்னை உருவாக விரும்ப வில்லை. எனது ஆவல் இவர்கள் இருவரும் நண்பர்களாய் இருக்க வேண்டும் என்பதே. அது இன்னும் தரமான படைப்புக்களை தரும்.

    நீங்கள் கேட்டதற்காக ஒரு சின்ன சமீபத்திய உதாரணம்-
    ஜெமோ எழுதியது- வளைகுடாவில் இந்திய (இந்து) தொழிலாளர்கள் மீது மனித உரிமைகள் மீறல் (வளைகுடா அங்காடி தெரு).

    வளைகுடாவில் தொழிலாளர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடை பெறுகிறது. ஆனால் அந்த முதலாளிகள் எல்லா மத தொழிலாளர்களையும் (இந்து இஸ்லாம் கிறித்துவ புத்த மத) தான் மோசமாக நடத்துகின்றனர். அதே போல எல்லா மத முதலாளிகளும் ஒரே வகை தான் இந்த விசயத்தில்.
    (ill treatment of Employees have been happening in the companies managed/owned by Arabs, Britishers, Hindus in Gulf & far east countries)

    ReplyDelete
  27. andalmaganJune 06, 2010

    anthaalu comedy thaanga mudiyala

    ReplyDelete
  28. @Haiti

    :)

    படைப்பை இலக்கிய ரீதியாக விமர்சனம்/திறனாய்வு செய்த தங்களின் profile அருமை..........

    ReplyDelete
  29. இன்னைக்கி அந்த http://arivuputrhiran.blogspot.com வலைபதிவே காணோம்....ஹா ஹா...

    ReplyDelete
  30. //இன்னைக்கி அந்த http://arivuputrhiran.blogspot.com வலைபதிவே காணோம்//
    ஏன்... சில தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர விமர்சன பூர்வமான விஷயங்களை சில நன்றாகவே இருந்தன.

    ReplyDelete
  31. ஈசுJune 07, 2010

    நீயா நானாவில் ..ருப்படி பட்டதை திசைதிருப்ப எழுதப்பட்ட பதிவுகள் , அதை எல்லோரும் மறக்க தொடங்கியிருப்பார்கள் என்பதால் காணோம் .

    ReplyDelete
  32. I wrote a comment in arivuputhiran blog and just few minutes after that only the web page disappeared...i have a copy of what i wrote, may be because of that or what i dont know

    endrum anbudan,
    N.Parthiban

    ReplyDelete
  33. விடுங்க சுரேஷ்கண்ணன்!
    அவரை பத்தி எல்லாம் எழுதி பெரிய ஆளாக்கி விட வேண்டாம்..

    ReplyDelete
  34. this is what i wrote in arivuputhiran's blog for his comment to Mr.S that he would take life of people who lies...after this comment within ten mins the blog disappeared...

    அன்புள்ள ஸ்டீபன்,

    தங்கள் வலைப்பக்கத்தை ஆரம்பம் முதல் படித்து தான் வருகிறேன். உங்களின் பல கருத்துக்களில் எனக்கு மாற்று கருத்துக்கள் இருந்தாலும் நான் சாருவின் வாசகன் என்ற முறையில் அமைதி காத்தே வருகிறேன் ஆனால் திரு.S அவர்களுக்கு தாங்கள் அளித்துள்ள பதில் என்னை இங்கே எழுத வைத்து விட்டது. நீங்களும் மற்றவர்களும் வார்த்தைகளால் சண்டை இட்டுக்கொள்ளும் வரை எமக்கு ஒரு பிரச்னையும் இல்லை ஆனால் உங்கள் வார்த்தைகள் செயலாகவும் மாறி மற்றவர்களை தாக்கும் என்று மறைமுகமாக மிரட்டும் போது என்னால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை...நம் நாடு சுதந்திர நாடு இருந்தும் ஏன் சட்டமும் காவல் துறையும் உள்ளது? நமக்கு தனிமனித சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு சுய கட்டுப்பாடும் மிக அவசியம்...யாரையும் மறைமுகமாகவும், நேரடியாகவும் - உடலாலோ, உள்ளத்தாலோ தாக்கும் உரிமை நமக்கு கிடையாது...நம்மிடம் வேஷம் போடுபவர்களின் உயிர்களை எடுப்பதல்ல நம் வேலை...அழிப்பது மிக சுலபம் நண்பரே!!! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல...எந்த ஒரு வேஷமும் ஒரு நாள் கலைந்து(கலைத்து) தான் ஆக வேண்டும்...

    என்றும் அன்புடன்,
    நெ. பார்த்திபன்.

    http://parthichezhian.blogspot.com/

    ReplyDelete
  35. AnonymousJuly 07, 2010

    சாருவை பற்றியே எழுதி ஏன் இப்படி நேரத்தை வீணடிக்கிறீர்கள். பேசாமல் ஏதாவாது ஒலக சினிமாவிற்கு திரைவிமர்சனம் எழுதுங்கள். செகொஸ்லாவாகியாவில் மைகேல் டோமர் என்று ஒரு புதிய டைரக்டர் அருமையாக படம் எடுக்கிறார் அதை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete