Wednesday, June 17, 2009

தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே


அன்புள்ள நண்பர்களுக்கு

'தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்க வேண்டும்'என்று கமல் சொன்னதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அடுத்து எழுதப்பட்ட இந்தப்பதிவில் அது குறித்து மாறுபட்ட பின்னூட்டங்கள் வந்தன. எனவே இதைக் குறித்த என் கருத்துக்களை தனிப்பதிவாக எழுத உத்தேசம். அதற்கு முன்னால் மக்களிடம் சர்வே ஒன்றை நிகழ்த்திப் பார்த்துவிடலாம் என்று விரும்புகிறேன். எனவே உங்களின் வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் உங்களின் வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறேன்.

'ஏற்கெனவே அவனவன் ஆயிரம் பிரச்சினைல செத்துட்டு இருக்கான். வந்துட்டாரு பெரிசா' என்று திட்ட விரும்புவர்கள் தங்கள் செயலை சாவகாசமாக நிகழத்திவிட்டாவது ஓட்டளிக்குமாறு வேண்டுகிறேன்.

ஓட்டளிப்பவர்களுக்கு விஜய டி ராஜேந்தர் மும்தாஜீடன் நடித்து புரட்சி செய்த, cannes திரைப்பட விழாவில் பங்கே பெறாத 'வீராச்சாமி்' திரைப்படத்தின் டிவிடி 'குலுக்கல்' (?!) முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் 'கொல்கிறேன்'.

suresh kannan

23 comments:

  1. நல்ல வேலை தமிழ் சினிமாவில் பின்னணி இசை தேவையா என்ற கேள்வி எல்லாம் எழவில்லை.

    நாக்க முக்க பாட்டை கேட்டுட்டு இந்த முடிவுக்கு வந்து விட்டீர்களோ என்னவோ?

    அழகிய கண்ணே - உதிரிப்பூக்கள்
    செந்தாழம் பூவில் - முள்ளும் மலரும்

    கதையோடு நகர்கிற பாடல்களை மறக்க முடியுமா?

    வருஷம் 16 படத்தில் பழமுதிர்ச்சோலை பாடலின் காட்சிகளை பாருங்கள், அதில் வரும் இசைக்கு மிகவும் பொருத்தமாக காட்சிகள் இருக்கும், மேற்படி காட்சிகள் படத்தை தாண்டி (நாட்டையும் தாண்டி தான்) செல்லாது.

    சுத்தி வளைச்சு சொல்ல வருவது இது தான், தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவை

    ReplyDelete
  2. இப்படில்லாம் படத்த போட்டு கேட்டா வேண்டாம்னு சொல்லாம என்னத்தச் சொல்ல!

    ReplyDelete
  3. ரெட்டைவால் குருவியில் வரும் ராஜராஜ சோழன் மாதிரி,
    இந்தியன்ல வரும் பச்சைக் கிளிகள் மாதிரி,
    அவ்வை சண்முகில வரும் வேல வேல மாதிரி,
    கதையோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வைத்து, பின்னனியில் பாடல் வந்தால் நல்லாத்தான் இருக்கு.

    படம் முடிய அரைமணி நேரமே இருக்கும்போது, ஹீரோ எதயோ குடுத்துட்டுப் போக, அப்படியே ஹீரோயின் அத கன்னத்துல வச்சு மேல பாக்க(அடுத்த சீன்ல சாகவேற போறா)... அப்படியே மங்கலாகி... காடு, மலை, மேடு ஏதாவது ஒன்னு டைப்ல செட்டப் போட்டு, காத்துல காஞ்ச இலை, மண்ணெல்லாம் பறக்க விட்டு, பின்னாடி ஆடுற ஆம்பளங்களுக்கெல்லாம் டௌசர் பனியன் யூனிபாமும், ஹீரோக்கு மேல இருந்து கீழ வர மறச்சி டிரஸ்சும், பின்னாடி ஆடுற பொம்பளங்களுக்கு பாதி மறச்ச யூனிபாமும், ஹீரோயினுக்கு கொஞ்சோண்டு மறச்ச டிரஸ்சும் போட்டு, குலுங்க குலுங்க ஆட விட்டு, காமராவ அப்பிடி இப்படி திருப்பி, தூக்கிகிட்டே ஓடி, சூட் பண்ணி, ஒரு ரீமிக்ஸ் பாட்டப் போடுவனுங்க பாருங்க...
    அப்படியே ஒரு கூட்டத்துல ஒருத்தன மத்தவங்க திரும்பிப் பாப்பாங்க (கூட்டிட்டு வந்தவன)...
    இன்னொரு கூட்டம் எந்திச்சி தம்மடிக்க போகும், அப்போ ஒருத்தன் சார் மறைக்காதீங்கன்னுவான்....

    சகிக்க முடியாத நேரங்கள்.

    இப்போ நெறைய இடங்கள்ல தம் வேற அடிக்க முடியாது; அதனால தேவையில்லாத பாடல்களைத் தவிர்ப்பதே நலம்.

    ReplyDelete
  4. வாக்காளர் மனநிலையை சிதைக்கும்படியான புகைப்படம் தேவையா? :-)

    ReplyDelete
  5. :-)

    ஓட்டு போட்டுடறேன்!

    ReplyDelete
  6. இந்த பதிவுக்கு இந்த படம் தேவையா.....???

    ReplyDelete
  7. AnonymousJune 18, 2009

    'அவசியமென்றால் ஓகே' -க்கு போட்டாச்சு ஓட்டு. இந்த மாதிரி ஒரு புகைப்படத்தைப் போட்டு சினிமாப் பாடல்களின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் ஒரு மனநிலையை வரவழைத்து உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறீர்கள் என்று உங்கள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். :-))

    ReplyDelete
  8. முதலில் இந்த சர்வே தேவையா என்று ஒரு சர்வே நடத்திவிட்டு, பின்னர் இந்த சர்வேக்கு வந்தால் என்ன?

    ReplyDelete
  9. காதுக்கு இரைச்சலான இசை(!?)யோட கன்னா பின்னான்னு ஆங்கிலமா, தமிழா அல்லது வேற லாங்குவேஜா(!?)ன்னு தெரியாத அளவுக்கு கத்துகிற பாடல்(!?)களை கட்டாயம் தவிர்க்கலாம்!

    இப்ப வற படங்களிலெல்லாம் எங்கடா பாட்டு போட்டுடப் போறாங்களோன்னு பயமா இருக்கு!

    பாட்டு புரியணும்! அப்படி புரியக் கூடிய பாட்டுக்கள்தான் மனசுல நிக்கும்!

    ReplyDelete
  10. சிகப்பு மல்லி படத்துல வரும்

    "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
    பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்
    தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்..."

    இந்த மாதிரி பாடல்களைக் கேட்டுப் பாருங்க!

    ReplyDelete
  11. பின்னூட்டமிட்ட /வாக்களித்த /வாக்களிக்கப் போகும் அனைத்து நண்பர்களுக்கும நன்றி.

    பதிவில் இணைக்கப்பட்ட image வீராச்சாமி பற்றிய நகைச்சுவைக் குறிப்பையொட்டி சேர்க்கப்ப்ட்டது. அதற்கும் பதிவின் மையத்திற்கும் நேரடி சம்பந்தமில்லை. எனவே image-ஆல் பாதிக்கப்படாமல் வாக்களியுங்கள்.

    நண்பர்கள் சில திரைப்பாடல்களை முன் வைத்திருக்கிறிர்கள். நன்றி. எழுதப் போகும் பதிவில் இதைப் பற்றி உரையாடலாம்.

    (ரொம்ப பில்டப் கொடுக்கறனோன்னு எனக்கே பயமா இருக்கு. :-)

    பிரசன்னா,

    நீங்கள் சொன்னது சரியா அல்லது தவறா என்று ஒரு சர்வே நடத்தினால் என்ன?:-)

    ReplyDelete
  12. /* நண்பர்கள் சில திரைப்பாடல்களை முன் வைத்திருக்கிறிர்கள். நன்றி. எழுதப் போகும் பதிவில் இதைப் பற்றி உரையாடலாம்.

    */

    அப்படியே இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ‘தென்பாண்டி சீமையிலே’ ஏற்படுத்தும் அதிர்வுகளை பாடல் இல்லாமல் திரையில் கொண்டுவர முடியுமா?

    ReplyDelete
  13. போட்டாச்சு ஓட்டு!

    ReplyDelete
  14. எதனால, யாரால பாட்டு வருதோ தெரியாது.... ஆனா அதோட feedback இயக்குனருக்கே போகும், இதுபோல...

    1) ச்ச... என்னா பாட்டு, சரியான இடத்துல, செம மீசிக்கோட, அழகான பாட்டு; கொன்னுட்டாருய்யா...

    2) இந்த இடத்துல பாட்டு தேவயில்லதான், ஆனா பரவால்ல நல்லாத்தான் இருக்கு...

    3) நல்லாத்தான போய்ட்டு இருதது... இந்த இடத்துல பாட்டு தேவயா?

    4) ஏண்டா இந்த கொல வெறி! இந்த இடத்துல போயி இப்பிடி ஒரு பாட்டு போட்டு கொல்லுறீங்க? உங்களுக்கெல்லாம் அறிவே இல்லயா? இல்ல, வந்த எங்களுக்கு அறிவில்லையா?

    ReplyDelete
  15. AnonymousJune 18, 2009

    பாஸ்,

    'இதுக்கெல்லாம்' ஒரு சர்வேவா?'-ன்னு தோணினாலும் வாக்கு போட்டுட்டேன்.

    ReplyDelete
  16. AnonymousJune 18, 2009

    இப்போது வரும் பாட்டுக்கள் அனைத்துமே கேட்கவும் பார்க்கவும் கொடுமையாக இருக்கிறது. அதிலும் தேவையேயில்லாத இடத்தில் பாடல்களை இடையூறாக வைக்கிறார்கள். மேலே உள்ள பின்னூட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற பாடல்கள் பெரும்பான்மை சற்று பழமையானவை. யாராலும் சமீபத்திய பாட்டை உதாரணம் காட்ட முடியவில்லை. எனவே பாட்டு தேவையில்லை என்பதுதான் நான் சொல்வது. பிழையிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  17. ஏன் இல்லை...
    சமீபத்தில் ரசித்து, ருசித்து, சிரித்த பாட்டு...

    ’ஸ்டைல்’ பிரம் குரு நம்ம ஆளு

    ReplyDelete
  18. ஒட்டு போட்டாச்சுங்க..

    ReplyDelete
  19. மன்னிக்கவும்..

    என்னுடைய முந்தய பதிவில் எழுத்து(கருத்து)ப் பிழை..

    "ஓட்டு போட்டாச்சு.." என்று இருந்துருக்க வேண்டும்..

    ReplyDelete
  20. hm paadal thevai thaan

    ReplyDelete
  21. Dear Friend!

    I am late to be a part of the survey, however, I enjoyed the blog and the comments therein. Especially, the comment by "Evano Oruvan" was excellent, his points are realistic, and the way is humorous...

    My opinion on songs is our life is interspersed with songs throughout. hence songs are for better expressions / communication. Background music can also express the feelings better, lot of examples we can quote from Raja's music.
    However, nowadays, songs are introduced for "Audio promotion" / "Kuthu songs for C center collection" etc. It's all with the Director / Producer's perspective.
    Final point is "Really Good Movies do not need Songs, even dialogue is not needed to express a situation."

    ReplyDelete
  22. அப்போ எப்படிதான் நம்ம கண்மணிகளுக்கு 'தொப்பிளையும், முன்பக்கம்;பின்பக்கம்' காட்டுவது.
    இதுகளைக் காட்ட தான் பாட்டானால்
    படத்தில் பாட்டு வேணாம்; வேண்டுமா? அல்பமா போட்டு தொலையுங்க... அதுகளைப் பாக்கிரவங்க
    ஆசையா வாங்கிப் பார்க்கட்டும்.
    தமிழுக்கு அருமையான பாடல்கள் ,திரைப்பட வாயிலாக கிடைத்து உண்மை. ஆனால் அதே வழியால்
    பல பெரும் குப்பைகள் உள்வந்து நோகவைத்து விட்டது.
    நான் தமிழ் திரைப்பட பிரதி எடுக்கும் கடைகளில் பாட்டு;சண்டையை நீக்கி தந்தால் 1 யூரோ கூடத்தர தயார்
    எனக் கேட்பதுண்டு.
    என் ரெமோட்டில் , forward தேய்ந்துவிட்டது.

    ReplyDelete
  23. சுரேஷ்,
    நீயா? நாயா? நிகழ்ச்சியில் எப்போதும் நடைபெறும் அபத்தங்களைப் போல, "கோவில் திருவிழாவில் கரகாட்டம் ஆபாசம்" என்பது போல ஒரு "வெளங்கிரும் விவாதம்" ஆட்டுமந்தைச் சிந்தனையாளர்களால் விவாதிக்கப்பட்டது.

    அதில் பல யோக்கியவான்கள், "கரகாட்டத்தையே தடை செய்யவேண்டும்" என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். கரகாட்ட ஆடலும் பாடலும் ஆபாசமாக இருக்கிறதாம். சவுந்தர்யலகரியில் இல்லாத ஆபசமும்,மானாட மசிராட ‍ல் இல்லாத அசிங்கங்களும் கரகாட்டத்தில் உள்ளதைக் கண்டுபிடித்த்து அவர்கள் சொன்னதால் , நான் முக்தி அடைந்தேன் அன்று.

    ***

    தமிழ் சினிமாவில் பாடல் தேவையா என்ற கேள்வியும் அப்படித்தான் உள்ளது.

    சினிமா என்பது ஒரு ஊடகம். வாழ்க்கையை/நிகழ்வை/வரலாற்றை..இன்னபிற ... பதிவு செய்ய மற்றும் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல ஊடகம்.

    தமிழர்களின் வாழ்க்கை ஆட்டம்/பாட்டம்/கூத்து/கொண்டாட்டம் என்றுதான் இருந்தது. அதன் வெளிப்பாடே கூத்து,கரகம்,நாடகம்,வில்லுப்பாட்டு,விவாதம்,ஒப்பாரி,தாலாட்டு என்று அனைத்தும். நிகழ்கால உதாரணம் அல்லது புது வரவு "கானாப்பாட்டு" .

    **

    தமிழ்சினிமாவில் பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்று கேட்டால் அது கேள்வி. இந்த வாழ்வியல் அங்கத்தை சினிமாவில் பதிய வேண்டுமா என்று கேட்டால்? அப்புறம் என்ன புண்ணாக்கு சினிமா ? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

    **

    மொன்னைத்தனமான விக்டோரியன் கலாச்சாரம் கொண்டாட்டங்கள் (கதாகலாட்சேபம் வகையறா ) சில இடங்களில் உள்ளது. அதையே சினிமாவில் காட்டினால் பின்னால் வரும் சந்ததிக்கு தவறான தவலைக் கொடுத்த குற்றம் வந்து சேரும்.

    **

    ஆட்டம்/பாட்டம்/உடல் சார்ந்த கொண்டாட்டம் இயல்பானது. தமிழக/வட மேற்கு மாகாணம்/பஞ்சாப்...இன்னபிற மாநிலங்கலில் இது இயல்பானது.
    உலக அளவில் மெக்சிகோ,ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் இயல்பாக இருக்கும் இந்த ஆட்டம்/பாட்டம்/உடல் கொண்டாட்டம் சார்ந்த வாழ்க்கைமுறை.

    லெமன் ட்ரீ பற்றி நீங்கள் சமீபத்தில் பேசியதால்...அதே ஹிமம் அபாஸ் (Hiam Abbass) நடித்துள்ள விசிட்டர்(http://www.thevisitorfilm.com/)எனும் படத்தை சமீபத்தில் பார்க்க நேரிட்டது. காய்ந்து போன நியூயார்க்கில் கொட்டடிக்குமந்த சப்தம் எழுப்பும் அதிர்வும் கொண்டாட்டமும் சொல்லமுடியாதது. தெருக்கலைஞனான என்னைப்போன்றவர்களுக்கு நியுயார்க்கின் சப்வே கொண்டாட்டங்கள் வாழ்வின் உன்னத தருணங்கள்.

    இது போன்ற தருணங்களை சினிமாவில் கதையின் இயல்பில் பதியவேண்டும். ஒதுங்கிச் செல்ல முடியாது.

    ***

    மற்ற படங்களில் ஏன் பாட்டுகள் இல்லை?

    மேற்குலக வாழ்க்கையில் பாடல்/ஆடல் கொண்டாட்டங்கள் தனியாகவே பதிவு செய்யப்படுகிறது. அதற்கான சந்தையும் உள்ளது.
    தமிழ்நாட்டில் அதற்கான சந்தை வராதவரை குறைந்த பட்சம் சினிமாவிலாவது அது பதிவு செய்யப்படவேண்டும்.

    **

    கேணத்தனமான நிகழ்கால தமிழ் வாழ்க்கையில் சினிமாவில் ஆட்டம்/பாட்டை இரசிக்கும் மக்கள் நிஜவாழ்வில் ஆடல்/பாடல்/உடல் கொண்டாட்டங்களை அசிங்கமாகப் பார்க்கும் போக்கு இருக்கும் வரை மானாட மசிராட ரேஞ்சில்தான் நமது கலை வாழ்வு இருக்கும் என்பது சாபக்கேடு.

    ReplyDelete