Saturday, October 18, 2008

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?

ரொம்ப நாட்களாக என் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. இது எனக்கு மட்டும்தான் நடக்கிறதா அல்லது பெரும்பாலோர் இதை அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் நான் மாத்திரம்தான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேனோ என்கிற சுயபச்சாதாபம் தரும் வேதனையை தாங்க முடியவில்லை. சில அனுபவங்களை கேள்விகளாக இங்கே இட்டிருக்கிறேன். நீங்களும் இந்த அனுபவங்களை சந்தித்திருக்கிறீர்களா அல்லது அதிர்ஷ்டவசமாக தப்பித்து இருக்கிறீர்களா என்று சொன்னால் தேவலை.

Photobucket

1) நடுஇரவில் ஆவலாக பேஷன் டி.வியைப் பார்க்க அமரும் போது, நான் பார்க்கும் நேரத்தில் மாத்திரம் தடித்தடியான ஆண்கள் நடந்து போகிறார்கள். ஏன்?

2) ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்க மலைப்பாம்பு மாதிரியான வரிசையில் எரிச்சலுடன் நின்று கொண்டிருக்கும் போது மற்றவர்களை விட்டுவிட்டு சரியாக என்னை தேர்ந்தெடுத்து "ஓரு தாம்பரம் வாங்கிக் கொடுங்க. ப்ளீஸ்" என்று கேட்கிறார்களே, ஏன்?

3) சினிமா காட்சிகளின் இடைவேளையில் சிறுநீர் கழிக்க கழிவறை நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அவஸ்தையோடு நிற்கும் போது என் முன்னால் நிற்பவன் மாத்திரம் பக்கெட் நிறைய சேர்கிறாற் போல் கழிந்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்துகிறானே, ஏன்?.

4) அலுவலகத்தில் தாமதமாகி பயங்கர பசியோடு வீடு திரும்பும் போது அன்றைக்கு பார்த்து என் எதிரிக்கும் கூட நான் சாப்பிட அளிக்க விரும்பாத 'ரவா உப்புமா'வை சைட்டிஷ் கூட இல்லாமல் மனைவி தயார் செய்து வைத்திருக்கிறாரே, ஏன்?

5) நான் எழுதும் மொக்கை பதிவுகளுக்கு கூட எதிர்பாராத விதத்தில் அதிகம் பின்னூட்டமிடும் சக வலைப்பதிவு நண்பர்கள் உருப்படியாக எழுதியிருப்பதாக நான் நினைத்திருக்கும் பதிவை முகர்ந்து கூட பார்ப்பதில்லையே, ஏன்?

6) நான் செல்லும் போது மாத்திரம் டாஸ்மாக்கில் "பீர் கூலிங்கா இல்லங்க" என்று சொல்கிறார்களே, ஏன்?

7) ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கவோ அல்லது திரைப்படத்தை பார்க்கவோ தீவிர உணர்வு ஏற்பட்டு தேடும் போது மிகச் சரியாக அந்த குறுந்தகடு மாத்திரம் கிடைக்காமலிருப்பதோ அல்லது எல்லாவற்றையும் கவிழ்த்துப் போட்டு எரிச்சலடைந்த பிறகு கடைசியில் கிடைக்கிறதே, ஏன்?

8) வில்லங்கமான காட்சிகள் இருக்காது என்று நினைத்து ஆங்கில ஆக்ஷன் படங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தீடீரென்று ஒருத்தி உடையை அவிழ்ப்பதும் அது வரைக்கும் இருந்த தனிமையை கலைத்து குடும்பத்தினர் யாராவது மிகச்சரியாக அதே நேரததில் அந்த இடத்தை கடந்து சங்கடத்தை ஏற்படுத்துவதும்.. ஏன்?

9) அடித்து பிடித்து பேருந்தில் ஏறி அவசரமாக இருக்கையைப் பிடித்து அமர்ந்த பிறகு நான் அமர்ந்திருக்கும் இருக்கை மாத்திரம் கிழிந்து போயோ அமிழ்ந்து போயோ அசெளகரியத்தை ஏற்படுத்துவது, ஏன்?

10) வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்க்கும் போது நான் வாங்கும் புத்தகத்தில் மாத்திரம் உள்பக்கங்கள் கிழிந்து போயோ அல்லது சிதைந்து போயோ எரிச்சலை கிளப்புவது ஏன்?

இன்னும் சில பிறிதொரு சந்தர்ப்பத்தில்....

இறுதியாக உங்களுக்கு.....

உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)
suresh kannan

16 comments:

  1. 'உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)'


    ஏன், நாங்கள் தருவது புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பு :)

    ReplyDelete
  2. /உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)//
    விதி அய்யா விதி.. மொக்கை பதிவாக இருந்தாலும், நல்ல பதிவு எழுதுவதால் இதையும் படிக்கின்றோம். வயலுக்கு இழைத்த நீர் புல்லுக்கும் பாய்வதில்லையா.. அது போலத்தான் இதுவும்.

    ReplyDelete
  3. வணக்கம் சுரேஷ்,

    ரொம்ப நொந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.இது எல்லாருக்கும் நடக்கிறது தான்.மர்ஃபிஸ் லா(Murphy's Law)கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.நீங்க சொல்லற எல்லாமே இந்த விதிக்குள்ள வந்துரும்.தத்து வார்த்தமாக இருந்தாலும் இதுக்கு அறிவியல் விளக்கம் உண்டு.உள்ளே புகுந்தால் படு சுவாரஸ்யமான விஷயம்.குவாண்டம் மெகாணிக்ஸ், கயாஸ் தியரி எல்லாம் கலந்து கட்டி அடிச்ச மாதிரி இருக்கும்.ஒரு உரல் தரேன்.படிங்க.

    http://books.google.com/books?hl=en&id=Huc56EBhvY0C&dq=murphy's+law&printsec=frontcover&source=web&ots=5A-n0uNYv-&sig=daMSs8nlPdJl53DrjFFjReUzn4w&sa=X&oi=book_result&resnum=6&ct=result#PPP1,M1

    போற வழியில.. ரொம்ப சுவாரஸ்யமா எழுதிறீங்க.

    ReplyDelete
  4. அலுவலகத்தில் தாமதமாகி பயங்கர பசியோடு வீடு திரும்பும் போது அன்றைக்கு பார்த்து என் எதிரிக்கும் கூட நான் சாப்பிட அளிக்க விரும்பாத 'ரவா உப்புமா'வை சைட்டிஷ் கூட இல்லாமல் மனைவி தயார் செய்து வைத்திருக்கிறாரே, ஏன்?


    Having experienced this earlier, should you not eat at a hotel before returning come.Perhaps however much you hate rava uppuma your affection for wife makes you
    eat it anytime at home. Am i giving wrong clues to your spouse :). Well as there is no
    chance of me eating at your
    home giving wrong clues is
    fine with me :).

    ReplyDelete
  5. //Anonymous said...
    'உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)'


    ஏன், நாங்கள் தருவது புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பு :)
    //

    கலக்கல் பதிவும் கலக்கல் பின்னூட்டமும் :)

    ReplyDelete
  6. //உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)
    //

    என்ன செய்ய.. மொக்கைக்கு மட்டும்தான் பின்னூட்டம் போடணும்னு உக்கார்ந்தா இப்படித்தான் எப்பவாச்சும் நல்ல பதிவும் வந்து மாட்டிக்குது :)

    ReplyDelete
  7. //1) நடுஇரவில் ஆவலாக பேஷன் டி.வியைப் பார்க்க அமரும் போது, நான் பார்க்கும் நேரத்தில் மாத்திரம் தடித்தடியான ஆண்கள் நடந்து போகிறார்கள். ஏன்?//

    உங்க டைம் சரியில்லைன்னு நினைக்குறேன் :) இல்லாட்டின்னா பசங்க எலிபெண்ட் வாக் போற டைமுல உக்காருவீங்களா :)

    ReplyDelete
  8. இதுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போடுறனே ஏன்?

    ReplyDelete
  9. இதுவே மிக, மிக சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..

    முதல் சோகமே, எனக்குள் பலத்த சிரிப்பை ஏற்படுத்தியது..

    நன்றி கண்ணன்.. என்னை அந்த ஒரு நிமிடமாவது இயல்பாக இருக்க வைத்தமைக்கு..

    ReplyDelete
  10. All these are true for almost everyone. You also might have noticed that the bus route you are waiting for would always be delayed.

    The reason is that one remembers the exceptions rather than the routine. So kill that self-pity! :)

    ReplyDelete
  11. mokkaiaaga irundhaalum anaivarukum nadappadhai elthiadhaal thodargiren....

    ReplyDelete
  12. எல்லோர்க்குமான பொது அனுபவங்கள்...

    ReplyDelete
  13. AnonymousMay 11, 2011

    Pichaipaathiram enthivanthen enra urukum paadalai kettu etho oru vitha sogamathil aazhthiruntha ennai intha mokkai piece ezhthi naan padikkum vannam vaithu ennai vai vittu vaiyiru vallika sirika vaithathathrku enn anbaarntha kodi kodi nandrigal... Vaazhha neengal vallamudan...

    ReplyDelete