Wednesday, November 28, 2007

கால் மீது கால் போட்டதற்காக குஷ்பு மீது வழக்கு

நடிகர் பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' என்கிற படத்திற்கான பூஜை சென்னையில் நடந்தது. பூஜைக்காக அருகில் பெரிய அளவில் முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். அவர் அமர்ந்திருக்கும் போது கால் மீது கால் மீது போட்டு அமர்ந்திருக்கிறார். இந்த காரணம் போதாதா?.... இது கடவுளையும் அதன் மூலம் இந்துக்களையும் அவமதிக்கும் என செயல் எனக்கூறி இந்து முன்னணயினர் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

"ஜாக்பாட்டுக்காக" ஜாக்கெட் தேர்வு செய்யும் நேரம் போக...பாவம்... குஷ்புவுக்கு வழக்குகளை சந்திக்கவே நேரம் சரியாயிருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

எப்படி அமர்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. கமல்ஹாசன் விழாவொன்றில் கால் மீது கால் போட்டு மேடையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் ஜெயகாந்தனை, ரசிகர்கள் கத்தி ரகளை செய்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. உலகமெங்கிலும் பைத்தியங்கள் உண்டு என்பது தெரிந்ததுதான் என்றாலும், இந்தியாவில்தான் இப்படியான விநோதமான பைத்தியங்களை காண முடியும். பொது நல வழக்குகள் மூலம் எத்தனையோ மக்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டிய வழக்கறிஞர்கள் மத உடையுடன் இப்படியான வழக்குகளை தொடுப்பது துரதிர்ஷ்டவசமானது.

அவமதிக்கும் செயல் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. பெண்கள் தங்கள் கால் தெரிகிறாற் உடையணிந்தால் அது அவமதிக்கும் செயலாக எந்த நாட்டிலோ கருதப்படுவதாக எங்கோ படித்த நினைவு. ஒரு தமிழ் திரைப்படத்தில் கடனை திருப்பித் தராத விவேக்கை நோக்கி இன்னொருவர் காறி உமிழ்வார். "ஏண்டா எங்கேடா கத்துக்கிட்டீங்க இதெல்லாம். எச்ச துப்பினா அவமதிக்கிறதா அர்த்தமா? இப்படி துப்பி துப்பிதாண்டா ஊரையெல்லாம் நாறடிச்சு வெச்சிருக்கீங்க? இதெல்லாம் அப்படியே ராம்நாட் பக்கம் திருப்பி விட்டா நாலு போகம் வெளையுமேடா?" என்பார் விவேக்.

எங்கள் வீட்டு பூஜையறையில் (என் மனைவியால்) வைக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள சாமியார் ஒருவர் கால் மீது கால் போட்டுத்தான் அமாந்திருந்திருக்கிறார். அவர் என்னை அவமதித்து விட்டார் என்று நான் சொன்னால் எப்படியிருக்குமோ, அப்படி அபத்தமாக இருக்கிறது இந்த நிகழ்வு.

photo courtesy: மாலை மலர்

21 comments:

  1. // அவர் அமர்ந்திருக்கும் போது கால் மீது கால் மீது போட்டு அமர்ந்திருக்கிறார் //

    அதற்கு மட்டும் இல்லிங்கோ... அவர் காலில் அவருடைய செருப்பு போட்டிருந்ததற்காகவும் சேர்த்துத்தாங்க கேஸ் போட்டிருக்காக.

    ReplyDelete
  2. தேசியக் கொடியை அவமதித்த நடமாடும் கடவுளை எதிர்த்து போடப்பட்ட வழக்குகள் ஏதாவது உண்டா?

    http://mutiny.wordpress.com/2007/02/22/godwoman-disrespects-the-national-flag/

    பாவம் குஷ்பூ :-))

    ReplyDelete
  3. கால்மீது கால் போட்டு இருப்பது எனக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் செருப்பணிந்த காலை அம்மனுக்கு நேராக நீட்டி இருப்பது நெருடலாகத்தான் இருக்கிறது. நாத்திகர்களில் கூட அடுத்தவரின் திருப்திக்காக திருநீறு வைத்துக்கொள்பவர்களை பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. சரியான கிறுக்கனுங்க!!!! நாட்டுல வர வர கிறுக்கு கூட்டம் ஜாஸ்தி ஆயிடுச்சு!!!
    ஹைய்யோ ஹைய்யோ!!!

    ReplyDelete
  5. உண்மை. குஷ்பூ கால்மேல கால் போட்டா இவங்களுக்கு என்ன. ஏதாவது செய்து குஷ்பூவ வருங்கால முதலமைச்சர் ஆக்காம விடமாட்டாங்க போல. இந்த கிறுக்குத்தனத்துக்கு அவனுகள ஒரு பத்து வருஷம் கோர்ட் நேரத்த வீனடிச்சதுக்காக உள்ளே போட்டாத்தான் சரியா வரும்.

    ReplyDelete
  6. படிக்காத பைத்தியங்கள்தான் இப்படி நடந்துகொள்ளும் என நினைத்துவிடாதீர்கள்.சென்னையில்லுள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைகழத்தின் துணைவேந்தர் அதன் உயிர் தொழில்நுட்ப மையத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார்.1 அல்லது 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.மேடையில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த பேராசிரியரைக் கண்டு டென்ஷனான துணைவேந்தர், அந்த துறையின் இயக்குனரை கூப்பிட்டு டோஸ் விட்டார் அதோடு அப்பேராசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்.வங்காளியாளியான அப்பேராசிரியர்ருக்கு ஏற்கனவே ஐ.ஐ.டி ரூர்கீயில் வேலை கிடைத்துவிட்டதால் போடா வெண்ணை எனச் சொல்லிவிட்டு போய்விட்டார்!

    குஷ்பூவிடயத்தில்...இறைவன் இல்லாத இடத்தைக் காட்டு அத்திசையில் கால் நீட்டி அமர்கிறேன் எனச் சொன்ன ஒளவையார் தான் நினைவிற்கு வருகிறார்!

    ReplyDelete
  7. நன்றாகச் சொன்னீர்கள் சுரேஷ்.

    ReplyDelete
  8. லூசுப் பசங்க...

    ReplyDelete
  9. Grrrrrrr!

    vera vela illaadha naainga!
    sirippudhaan varudhu ;)

    is this really a fact? :)

    ReplyDelete
  10. லிங்கத்தின் மீது காலை வைத்ததற்காகக் கண்ணப்பர் மீது கேஸ் போடப் போகிறார்களாமா?

    சிலை பூஜையறையிலோ கோவிலிலோ வழக்கமாக இருக்கும். இப்போது திரைப்பட விழாக்களில், அங்கு இங்கு என்று எல்லாவிடத்திலும் கொண்டு வந்து வைப்பது முறையா என்று தெரியவில்லை. ஒரு வேளை அவ்வை சண்முகியில் கமலும் மீனாவும் கும்பிடும் ப்ளாஸ்டர் பிள்ளையார் போல - இதிலும் எதையாவது பொம்மை செய்து வைத்திருக்கப் போகிறார்கள்.

    எது எதெற்கோ வழக்கு போடலாம். இவர்களுக்கு எல்லாவற்றிற்கும் நேரமிருக்கிறது.

    கஷ்டம்!

    ReplyDelete
  11. podang mairu

    ReplyDelete
  12. :(

    அவ்வை சண்முகியில் தாலி கட்டியவுடன் கணபதி சிலை காணாமல் போகும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  13. கூட்டத்தில் முன் வரிசையில் காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்தைருந்தவரைக் காட்டி பெரியாரிடம், " அய்யா, அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தா உங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு அதை ஆட்டிக் கொண்டிருப்பான். " என்று சொல்லி காதைக் கடிக்க, பெரியாரின் பதில் இது:

    " அவரோட காலை அவர் ஆட்டறார். இதில் மரியாதைக் குறைவு எங்கே வந்தது ? அவரை 'அவன் இவன்'னு நீர்தான் மரையாதை இல்லாமல் பேசுகிறீர். "

    ReplyDelete
  14. குஷ்பு கால் மேல கால் போட்டதுக்கு வழக்கு தொடுப்பது எல்லாம் விளம்பரத்திற்க்கா தான், அவர் யார் மீதும் கால் போடாதவரையில் அது தவறல்ல, ஏன் எனில் சினிமா கொட்டாயில இருக்க சின்ன கேப்ல கூட சிலர் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து அடுத்தவன் மேல கால போடுவாங்க, அப்போ எல்லாம் , நான் நேரடியாக கேட்டு விடுவேன், நீங்க ஒன் டே சி.எம் ஆ இருக்கிங்களானு!(அர்ஜூன் முதல்வனில் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து போஸ் கொடுப்பார், அதுக்கு பிறகு தான் பல நாயகர்களும் அப்படி போஸ்டர் ஒட்டிக்க ஆரம்பிச்சாங்க)

    குஷ்புக்கு "face value" தான் அதிகம்னு சொல்றாங்க இப்போ கால் வேல்யும் அதிகமா இருக்கும் போல தெரியுதே! பாய்ஸ் படத்தில் பெண்கள் கால் மேல கால் போடுவதற்கு ஒரு விளக்கம் தருவார்கள்(வசனம் சுஜாதா)அது வேற இந்த சமயத்தில நியாபகத்துக்கு வருதே :-))

    ReplyDelete
  15. அப்ப குஷ்பூ மீது கால் போட்டதற்கு யார் மீது வழக்கு போடுவது ?

    ReplyDelete
  16. இன்னிக்கு தினமலர்லே இதைப் படிச்சதும் எனக்கும் நம்ம அவ்வையார் ஞாபகம்தான் வந்தது.
    பாவம். அவுங்களுக்கு சாமி இல்லாத இடத்தைக் காட்டக்கூடாதா?

    வரவர எதுக்குன்னுதான் இல்லை......

    இன்னொரு நாட்டிலே மதத்தலைவர்
    பெயரை டெடிபேருக்கு வச்சுட்டாங்கன்னு ஒரு டீச்சருக்கு தண்டனை.

    ரெண்டு நாளா நியூஸி டிவி நியூஸ்லே இடம்பிடிச்சுக்கிட்டு இருக்கும் விஷயம் .

    என்னமோ போங்க(-:

    ReplyDelete
  17. இங்கு கால் மேல் கால் போடுவது பிரச்சினை இல்லை, கடவுள் சிலை முன் காலணியுடன் அவமதிப்பது போல் அமர்ந்திருப்பதே காரணம் என நினைக்கிறேன். பொது மேடையில் கடவுள் சிலைகளை வைக்காமல் இருப்பதே சரியாகும். இதே ஒரு நாத்திக மேடையில் அவ்வாறு அவர் செய்திருந்தால் வேறு விடயம். பூசை போடும் விழாவில் கடவுள்களுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் தானே :(

    ReplyDelete
  18. ஐயா begging bowl அவர்களே, குஷ்பு கால் மேல் கால் போட்டதுக்கு அல்ல கேஸ் போட்டது. காலில் செறுப்பு போட்டதுக்குத்தான், அதுவும் சாமி முன்னால. அப்புடீன்னு சொல்லுது இந்தச் செய்தி

    ReplyDelete
  19. பிள்ளையாரை ஊர்வலமாக எடுத்துச் சென்று,கடலில் கரைப்பதற்காக காலால் மிதிமிதியென மிதிக்கிறான்.. அப்போதெல்லாம் இவர்கள் மனம் புண்படவில்லை.. இப்போது இவர்கள் மனம் புண்படுகிறதாமா? கொடுமை!

    இது சம்பந்தமாக பதிவிட்டதற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  20. நேத்திக்குப் போட்ட பின்னூட்டத்தைக் காங்கலை. அது சரி. பாபா சொன்னதைத்தான் நானும் சொன்னேன். கூட சேத்துச் சொன்னது இது.

    'லிங்கத்து மேல கால வச்சார்னு கண்ணப்பர் மேல கேஸ் போடப் போறாங்களாமா?'

    ReplyDelete
  21. அதோடு எதுக்காக இப்படி சிலைகளை மேடைக்கு மேடை வைக்கிறாங்கன்னும் தெரியலைன்னும் குறிப்பிட்டேன். இப்படிக் கடவுள் சிலைகளை விழாக்களில் பயன்படுத்தலாமா என்று அறிந்தவர்கள் சொல்லவேண்டும். பூஜையறை கோவில் தவிர வேறு எங்கும் சிலைகளை வைக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete