Monday, August 27, 2007

சும்மா.... கொஞ்சம் வார்ம்-அப்

வேலை வெட்டி ஏதுமில்லாத ஒரு தருணத்தில் என்னுடைய வலைப்பதிவை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வருடத்தில் வெறும் ஏழே ஏழு பதிவுகளே எழுதியிருக்கிறேன் என்று தெரிய வந்தது. 'நல்ல விஷயம்தானே' என்று ஆனந்தப்படுபவர்கள் 'சிவாஜி' திரைப்படத்தை இரண்டாவது தடவையாக பா¡க்கக் கடவது! (முதன் முறையாக பார்த்த கொடு¨மான அந்த தண்டனையைப் பற்றி விரைவில் எழுத உத்தேசம்). நேரில் பார்க்கும் வலைப்பதிவு நண்பர்கள், "எங்கங்க இப்பல்லாம் blog-ல உங்க ஆளையே காண்றதில்ல" என்று கேட்கும் போது அவர்களின் குரலில் இருப்பது ஆனந்தமா, வருத்தமா என்று என்னால் இனம் காண முடிவதில்லை. எனவே...

இனி அடிக்கடி இந்தப்பக்கத்தில் உலாவுவது என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே கொஞ்சம் வார்ம்-அப் செய்து கொள்வதற்காக "புத்தகம் பேசுது" (செப்டம்பர் 2007) இதழில் பிரசுரமாகியிருக்கிற "புத்தகப் புதிர்" என்கிற பகுதியை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன். (சொந்தமாகவே தயாரிக்க சோம்பேறித்தனம் என்பதால்).

விடை தெரிபவர்கள், உங்கள் மொபைல் போனை எடுத்து.... ஸாரி, (ரேடியோ அதிகம் கேட்பதால் வந்த வினை) பின்னூட்டத்தில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பதிவை என்னைத் தவிர மற்ற யாராவது படிக்கிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுவதால், பின்வரும் கேள்விகளுக்கு 'நமீதா' என்று பதிலளித்தாலும் பரவாயில்லை. பின்னூட்டமிடுங்கள். யாரும் 'ம்' கொட்டாமல் எழுதுவதற்கு என்னமோ போலிருக்கிறது.

இனி கேள்விகள்:



1) தமிழின் முதல் நாடகமான 'மனோன்மணியம்" ஆங்கிலத்தில் வந்த எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?

2) விலங்குகள் கதைகளில் (கார்ட்டூனில்) பேசுவது இன்று சகஜமாகி விட்டது. மூட்டைப்பூச்சி பேசுவதாய் தமிழில் எதை எழுதியவர் யார்?

3) சாகுந்தலத்தை தமிழில் மொழியெர்த்தவர் யார்?

4) சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், பேய் ஓடிப் போச்சு எனும் பிரபல கதைகளுக்கு இடையிலான ஒற்றுமை என்ன?

5) முதல் நாவலை தமிழுக்குத் தந்த வேதநாயகம் பிள்ளை பார்த்த வேலை என்ன?

6) 'அக்பர் சாஸ்திரி' எனும் பிரபலமான பாத்திரத்திற்குச் சொந்தமானவர் யார்?

7) 'மோகானங்கி' என்பதுதான் தமிழின் முதல் வரலாற்று நாவலாக அறியப்படுகிறது. எழுதியவர்?

8) சேக்ஸ்பியரின் 'As you like it' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து, மேடையேற்றி நடித்தும் காட்டியவர்?

9) 'பாரதி காலமும் கருத்தும்' என்ற திறனாய்வு நூலுக்காக 1983-ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் யார்?

10) தமிழில் புரட்சிகர இலக்கியங்களின் தாய்வீடாகக் கருதப்படும் 'தாமரை' இதழைத் தொடங்கியவர் யார்? எந்த ஆண்டு?

(விடைகள் விரைவில்)

20 comments:

  1. கேள்விகளைப் படித்துவிட்டேன் என்று சொல்லுவதற்காக இந்தப் பின்னூட்டம். ;)

    -மதி

    ReplyDelete
  2. நமீதா.

    ம்!

    (எந்த பதிலை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.) :))

    ReplyDelete
  3. 1. The Secret Way - எழுதியவர் Lord Lytton

    ReplyDelete
  4. ம் :)

    பி.கு: உண்மையாகவே எந்த கேள்விக்கும் பதில் தெரியலை சுரேஷ்.

    ReplyDelete
  5. "பின்வரும் கேள்விகளுக்கு 'நமீதா' என்று பதிலளித்தாலும் பரவாயில்லை. பின்னூட்டமிடுங்கள். யாரும் 'ம்' கொட்டாமல் எழுதுவதற்கு என்னமோ போலிருக்கிறது..."

    மனம் விட்டு சிரித்தேன்.

    வேதநாயகம் பிள்ளை நான் பிறந்த ஊர் மயிலாடுதுறையை சேர்ந்தவர். (நல்லவர்களும் பிறந்து இருக்கிறார்கள்!!!). அவர் ஆசிரியராக
    வேலைப் பார்த்தார் என்று நினைக்கிறேன். தவறு என்றால் மன்னியுங்கள்.

    பதில்கள் அனைத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன். அடுத்த முறை கேள்விகளை சற்று சுலபமாக கொடுக்கவும்....

    அடிக்கடி எழுதுங்கள் சுரேஷ்...

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  6. //அடுத்த முறை கேள்விகளை சற்று சுலபமாக கொடுக்கவும்.... ///

    1. Write your name in English.

    Clue: No numerals.

    ReplyDelete
  7. எங்கெடா நம்ம சுரேஷெ ரொம்ப நாளா காணோமேன்னு அப்பப்ப நெனச்சுக்குவேன் (உண்மை, நம்புங்க).
    மீண்டும் புது வேகத்துடன் வருவது அறிந்து மகிழ்ச்சி.

    நான்காவது கேள்விக்கு மட்டும் பதில் இப்போதைக்கு : நாஞ்சில் பிடிசாமி எழுதியவையாக இருக்கும் இவை.

    மற்ற கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை நண்பரே.

    ReplyDelete
  8. 9. Tho.Mu.Si. Ragunathan (Sahitya academy for Bharathi Kalamum Karuthum)

    - PK Sivakumar

    ReplyDelete
  9. 1) The Secret Way (Ragasiya Vazhi)
    2) Puthumaipithan (katilai vitu irangaa kathai)
    3) Santhanam (Rajaji friend?)
    5) munseef (vedhanayaam pillai partha velai)
    6) Thi. Janakiraman (akbar sastri ezuthiyavar)
    7) Saravana Muthu Pillai
    9) Tho.mu.si raghunathan
    10) Thamarai started by Jeeva - Year probably 1959 or 60

    Parisai anupi vaikavum :-)

    - PK Sivakumar

    ReplyDelete
  10. 1) The Secret Way (Ragasiya Vazhi)
    2) Puthumaipithan (katilai vitu irangaa kathai)
    3) Santhanam (Rajaji friend?)
    5) munseef (vedhanayaam pillai partha velai)
    6) Thi. Janakiraman (akbar sastri ezuthiyavar)
    7) Saravana Muthu Pillai
    9) Tho.mu.si raghunathan
    10) Thamai started by Jeeva - Year probably 1959 or 60

    Parisai anupi vaikavum :-)

    - PK Sivakumar

    ReplyDelete
  11. 1.The secret way by Lord Lytton

    5. District Magistrate.

    6. Thi. janakiraman

    7. saravana muthu pillai.

    8. pammam sambandha mudhaliyar.

    9. tho.mu.si. raghunathan

    10. CPI in 1950. First editor : Jeeva

    ReplyDelete
  12. எனக்கு சரியாய் தெரிந்தது
    2- புதுமை பித்தன்
    5-முன்சீப்
    6- தி,ஜானகிராமன்
    மட்டுமே. கடைசி கேள்விக்கு பதில் தாமரை ஒரு கம்யூனிச கட்சி சார்ப்பு பத்திரிக்கை என்று மட்டும் நினைவு. ஜெ.காந்தன்
    எங்கோ எழுதியிருந்தார். பி.கே.எஸ் சரியா சொல்லிட்டார் :-)
    4 வது கேள்விக்கும் சந்தேகமான பதில், மஞ்சூர் ராசா சொன்னதேதான்.

    ReplyDelete
  13. see... how many feed back...

    so you can be happy that people are there to read your blog..

    but the questions putforth by you are sensible...
    expect ur. answers

    ReplyDelete
  14. நம்ம பி கே எஸ்சும், உஷா மேடமும்
    சொன்னதால் எனக்கும் தெரிஞ்சிரிச்சு.

    ReplyDelete
  15. பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தி பதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பாலராஜன், சிவா, உஷா, நீங்கள் அளித்த (சில) பதில்கள் சரிதான்.

    பி.கே.எஸ்., பிரகாஷ், ரெண்டு பேரும் கலக்கிட்டீங்க.... (பாலாஜி மாதிரி இணையத்துல பிட் அடிக்காம சொந்தமா யோசித்து பதிலளிச்சிருப்பீங்கன்னு நம்பறேன். :-)

    கேள்வி எண்கள் 3 மற்றும் 4-ஐத்தான் எல்லோரும் சாய்ஸ்ல விட்டிருக்கீங்க. (முழு விடைகள் கீழே)

    வேறொரு சந்தர்ப்பத்தில் வேறு சில கேள்விகளுடன் விரைவில் சந்திக்கிறேன். மறுபடியும் நன்றி.

    ReplyDelete
  16. 1) தமிழின் முதல் நாடகமான 'மனோன்மணியம்" ஆங்கிலத்தில் வந்த எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?

    The Secret Way (லார்ட் லிட்டன்)

    2) விலங்குகள் கதைகளில் (கார்ட்டூனில்) பேசுவது இன்று சகஜமாகி விட்டது. மூட்டைப்பூச்சி பேசுவதாய் தமிழில் கதை எழுதியவர் யார்?

    புதுமைப் பித்தன்

    3) சாகுந்தலத்தை தமிழில் மொழியெர்த்தவர் யார்?

    மறைமலை அடிகள்

    4) சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், பேய் ஓடிப் போச்சு எனும் பிரபல கதைகளுக்கு இடையிலான ஒற்றுமை என்ன?

    இவை அனைத்தும் அண்ணா எழுதியவை

    5) முதல் நாவலை தமிழுக்குத் தந்த வேதநாயகம் பிள்ளை பார்த்த வேலை என்ன?

    மாயூரத்தில் முன்சீப் வேலை

    6) 'அக்பர் சாஸ்திரி' எனும் பிரபலமான பாத்திரத்திற்குச் சொந்தமானவர் யார்?

    தி.ஜானகிராமன்

    7) 'மோகானங்கி' என்பதுதான் தமிழின் முதல் வரலாற்று நாவலாக அறியப்படுகிறது. எழுதியவர்?

    சரவணமுத்துப் பிள்ளை (1895)

    8) சேக்ஸ்பியரின் 'As you like it' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து, மேடையேற்றி நடித்தும் காட்டியவர்?

    சம்பந்த முதலியார் (1891)

    9) 'பாரதி காலமும் கருத்தும்' என்ற திறனாய்வு நூலுக்காக 1983-ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் யார்?

    தொ.மு.சி.ரகுநாதன்

    10) தமிழில் புரட்சிகர இலக்கியங்களின் தாய்வீடாகக் கருதப்படும் 'தாமரை' இதழைத் தொடங்கியவர் யார்? எந்த ஆண்டு?

    ப.ஜீவானந்தம் (1958)

    ReplyDelete
  17. (நன்றி: புத்தகம் பேசுது - செப்டம்பர் 2007)

    ReplyDelete