Saturday, December 03, 2011

பெண்குறிமையவாத திரைப்படம்


  கொலம்பியானா' என்கிற பிரெஞ்ச் - அமெரிக்க திரைப்படம் பார்த்தேன். வழக்கமான பழிவாங்கும் கதை. தன் கண்ணெதிரே பெற்றோரை கொலைசெய்யும் மாஃபியா கும்பலை தேடி பழி தீர்க்கும் ஒரு பெண்ணின் கதை. ஆணே பெரும்பாலும் பறந்து சாகசம் செய்யும் பெண் சரசம் மாத்திரமே செய்யும் ஆண்குறிமையவாத (எப்பூடி, இலக்கிய வாசனை வருதா) ஆக்சன் திரைப்படங்களில் இருந்து விலகி ஒரு பெண் (அதுவும் கருப்பினப் பெண்) சாகசம் செய்வதை பிரதானப்படுத்தியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். மற்றபடி அதே லாஜிக் இல்லாத கிளிஷேவான ஆக்சன் காட்சிகள்.  "அவ எலி மாதிரி எங்கிருந்தாவது புகுந்து வருவா" என்று வில்லனே சொல்வது போல் பாதாளக்குழிகளில் பதுங்கி பழி தீர்க்கிறாள் ஹீரோயின். FBI அதிகாரியாக வருபவரின் காட்சிகள் சிறிது நேரமே என்றாலும் (Lennie James) அந்த நபர் சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான திரைப்படமென்றாலும் சற்றே விறுவிறுப்பான திரைக்கதைக்காக பார்த்து வைக்கலாம்.


suresh kannan

6 comments:

  1. சுரேஷ் ஜீ,தலைப்பை சரியா வாசிக்கவே திணறிட்டேன்...:)) எங்கிருந்து புடிக்கறீங்க இது மாதிரி வார்தைகளை...:))

    ReplyDelete
  2. ஒரு மிக அபத்தமான சினிமா பார்க்க விரும்புவர்கள் இந்த படத்தை தவறாமல் பார்க்கவும்.இத்துடன் ஒப்பிட்டால் நம் பாபா,ஆளவந்தான்,தசாவதாரம எல்லாம் "Bicycle Thieves" range!!

    ReplyDelete
  3. download n watch movie jaloux

    http://www.imdb.com/title/tt1684892/

    arumaiyaa yirundhadhu...

    ReplyDelete
  4. watch that movie jaloux...dont miss...yennamo pannuchchu...d

    ReplyDelete